கமல்ஹாசனின் ‘அமெரிக்கா’ செண்டிமெண்ட்!

ந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் தனது படங்களில் துணிந்து புகுத்துவதில் தமிழ்சினிமாவில் முன்னணியில் இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன்.

ஏற்கனவே தனது முந்தைய படங்களான விஸ்வரூபம், உத்தம வில்லன் இரண்டு படங்களுக்கு சவுண்ட் மிக்ஸிங் வேலைகளை அமெரிக்காவில் தான் செய்து முடித்தார்.

கமலின் இந்த புதிய தொழில்நுட்பங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் இப்போது தனது தூங்காவனம் படத்துக்காக மிக்ஸிங் வேலைகளையும் அமெரிக்காவிலேயே செய்ய முடிவெடுத்திருக்கிறாராம் கமல்.

பிரபல ப்ரெஞ்சு படமான ஸ்லீப்லெஸ் நைட் படத்தின் ரீமேக் உரிமையை ஸ்பெஷலாக வாங்கி ‘தூங்காவனம்’ படத்தை எடுத்திருக்கிறார் கமல். படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகிறது.

அமெரிக்கா செண்டிமெண்ட் கையை கடிக்காம இருந்தால் சரி!

Kamal HassanThoongaa Vanam
Comments (0)
Add Comment