‘டாக்ஸிக்’ தமிழக வர்த்தகம் மூலம் புதிய சாதனை!

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய் முன் பணமாக பெறப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் தமிழக திரைப்பட வணிகத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இதன் மூலம் இந்த படத்தை பற்றி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக இது இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.

அதிகபட்சமான அணுகுமுறை மற்றும் பிராந்திய வலிமையை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இப்படத்தின் வெளியீடு- சக்தி வாய்ந்த பல விநியோகஸ்தர்களுடனான உத்தி மூலம் செயல்படுத்தப்படும்.

அந்த வகையில் சென்னை மாநகரத்தை ஸ்வரூப் ரெட்டியின் கீழ் இயங்கும் திங்க் ஸ்டுடியோஸ் கையாளுகிறது. செங்கல்பட்டு பகுதியை டிரைடண்ட் ரவி தலைமையிலான ஒயிட் நைட்ஸ் விநியோகிக்கும். கோயம்புத்தூர், வடக்கு மற்றும் தென் ஆற்காடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை எஸ் பிக்சர்ஸ் சீனிவாசன் மேற்பார்வையிடுவார். அதனைத் தொடர்ந்து மதுரை- ராமநாதபுரம்- திருச்சி- தஞ்சாவூர் -சேலம் ஆகிய முக்கிய பகுதிகளை ஃபைவ் ஸ்டார் செந்தில் நிர்வகிப்பார். இது போன்று கட்டமைக்கப்பட்ட பிராந்திய விநியோக முறை- மாநிலம் முழுவதும் உள்ள சிங்கிள் ஸ்கிரீன் மற்றும் மல்டிஃபிளக்ஸ் ஸ்கிரீன்ஸ் ஆகிய இரண்டிலும் வலுவான திரையிடலை பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Actor YashDirector Geetu MohandasToxic movie