மவுசு குறைஞ்சிடுச்சு போல? : இனிமே மலையாளப் படமும் த்ரிஷாவுக்கு ஓ.கேவாம்!

ன்றைய தேதியில் நயன் தாராவுக்கு சரியான போட்டி என்றால் அது த்ரிஷா தான் என்கிறது கோடம்பாக்கம்.

ஆமாம், இந்த இருவரும் தான், நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்றைக்கும் ஹன்ஷிகா, கீர்த்தி சுரேஷ் என பல புதுமுகங்களுக்கு மத்தியில் கோலோச்சு வருகிறார்கள்.

நடிக்க வந்த 17 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இத்தனை வருடங்களில் தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக மட்டுமே நடித்து வந்தார் த்ரிஷா.

இந்த இருமொழிகளைத் தவிர மற்ற மொழிப்படங்களை தவிர்த்து வந்தவர் முதல் முறையாக மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார்.

நிவின் பாலி ஹீரோவாக நடிக்கும் இப்படத்துக்கு ‘ஹே ஜூட்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். கோவாவைச் சுற்றி கதை பிண்ணப்பட்டிருக்கும் இப்படத்தை ஷியாம் பிரசாத் என்பவர் இயக்குகிறார்.

எப்போதுமே தமிழ், தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புகள் இல்லாதவர்கள் தான் அடுத்து மலையாள, கன்னடம் என்று தங்களது வண்டியைத் திருப்புவார்கள். அந்த கணிப்பின் படி பார்த்தால் ரசிகர்களிடையே த்ரிஷாவுக்கு இருந்த மவுசு குறைந்து அவருடைய மார்க்கெட் டல்லடித்ததன் காரணமாகவே இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.

actress trishamalayalam cinema hey judeTrisha
Comments (0)
Add Comment