நடிக்க வந்து 10 வருடங்களுக்கும் மேலாகியும் அவருடைய அந்த ஆசை நிறைவேறாமலேயே இருந்தது.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் புதுப்படத்தில் நடிக்க சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்தமாகியிருக்கிறார் த்ரிஷா.
இதன் மூலம் தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகும் உற்சாகத்தில் இருக்கும் த்ரிஷா திடீரென்று தனது ஹேர் ஸ்டைலை மாற்றி புது லுக்கில் காட்சி தருகிறார்.
நடிகை ஓவியாவைப் போல தலைமுடியை மிகவும் சிறியதாக வெட்டியிருக்கும் அவருடைய இந்த கெட்டப் சேஞ்ச் தினசரி வாழ்க்கைக்கான லுக்கா? அல்லது ரஜினி படத்தில் அவருடைய கேரக்டருக்கான லுக்கா? என்பது தெரியவில்லை. அதே சமயம் ரஜினி பட அறிவிப்புக்குப் பின் த்ரிஷா இப்படி ஒரு தோற்றத்தில் காட்சியளிப்பதால் கண்டிப்பாக அதற்காகத்தான் இருக்கும் என்கிறார்கள்.