த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ ஷூட்டிங் ஓவர்!

மிழ்சினிமாவின் மார்க்கண்டேயி என்று பட்டம் சூட்டப்பட்ட த்ரிஷா நாயகியாக நடிக்கும் திரைப்படம் ‘பரமபதம் விளையாட்டு’.

திருஞானம் இயக்கும் இப்படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ் மேன்சனில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தை பற்றி இயக்குனர் திருஞானம் கூறும் போது, ”இதை போன்ற ஒரு கதையில் த்ரிஷா முதன் முதலாக நடிக்கிறார். இதை நான் மிகைப்படுத்தி கூறவில்லை அதான் உண்மை. த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படங்களில் இது புதுமையான, முக்கியமான படமாக இருக்கும்.

த்ரிஷா இப்படத்தில் நடிப்பது தனக்கு சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார். இந்த கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினார். படப்பிடிப்பில் கடினமான காட்சியில் த்ரிஷா ஒரே டேக்கில் நடித்தார். படத்தில் நிறைய ட்விஸ்ட் மற்றும் திருப்பங்கள் இருக்கும் ரசிகர்களுக்கு அது மிகவும் பிடிக்கும் என்றார்.

படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரமாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் இப்படத்தின் கதையை கேட்டு இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதற்காக மற்ற படங்களின் தேதியை மாற்றி விட்டு வந்துள்ளார்.

இப்படத்தை 24 ஹெச்.ஆர்.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பார்வை இம்மாதத்தில் வெளியாகும்.

Paramapadham VilaiyattuTrisha
Comments (0)
Add Comment