பண்பாட்டு அடையாளங்களை இழந்து நிற்கும் கிராமத்து வாழ்வியலை சொல்ல வரும் ‘உளிரி’

ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ் தயாரிக்கும் படம் ‘உளிரி’.

இந்த படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சயனி நடிக்கிறார். மற்றும் பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோர் நடித்துள்ளனர்.

பாடல்கள் எழுதி, இசையமைத்து படத்தை இயக்குகிறார் ஆர். ஜெயகாந்தன்

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது.. ‘சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த ‘உளிரி’ எனும் மீன் இனமே அழிக்கப்பட்டு விட்டது…

அதுமட்டுமல்லாமல் எனது வாழ்வியல் பண்பாட்டின், பல கூறுகள் அழிக்கப்பட்டு இன்று காவிரியாற்று கிராமங்கள் தனது அடையாளங்களை இழந்து பொலிவற்று, இயல்பை தொலைத்து பொய்யான முகப்பூச்சோடு உண்மை பொலிவை இழந்து காணப்படுகிறது.

நமது பண்பாட்டின் கூறாய் இருந்த இந்த காதல் இன்று அழிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தன் வாழ்விடத்தைச் சார்ந்து நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு வாழ்வியலாக இந்த உளிரி திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறேன் .

படப்பிடிப்பு கும்பகோணம், ஜெயங்கொண்டம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார்.

ShinySureshUliri JayaKanthanUliri Movie News
Comments (0)
Add Comment