விஜய் சேதுபதியை இயக்குகிறார் ‘வா டீல்’ ரத்தின சிவா

 

ருண் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘வா டீல்’. அறிமுக இயக்குநர் ரத்தின சிவா இயக்கியுள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அதற்கு முன்பே விஜய் சேதுபதியை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க கமிட்டாகியிருக்கிறார் இயக்குநர் ரத்தின சிவா.

‘வா டீல்’ திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது என்கிற தகவல் விஜய் சேதுபதி காதுகளை எட்டியதே இதற்கு முக்கிய காரணம்.

இரு தினங்களுக்கு முன்பு ரிலீசான ‘நானும் ரெளடி தான்’ திரைப்படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட்டாக அமைந்திருக்கிறது. அந்த வெற்றியைத் தக்க வைக்கும் விதமாகத்தான் இயக்குநர் ரத்தின சிவாவைக் கூப்பிட்டு கதை கேட்டிருக்கிறார். கேட்ட மாத்திரத்தில் கதை பிடித்துப் போனதால் உடனே கால்ஷுட் கொடுத்து விட்டார். அதோடு இந்தப்படத்தை ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை தன்னோடு இணைந்து தயாரித்த பி.கணேஷ் உடன் காமன்மேன் நிறுவனம் சார்பில் விஜய் சேதுபதியே இணைந்து தயாரிக்கிறார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படம் ஆக்‌ஷன்,லவ் கலந்த பக்கா கமர்ஷியல் படமாக தயாராகப் போகிறது. விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

படப்பிடிப்பு விரைவில்ஆரம்பமாக உள்ளது.

Rathina ShivaVaa DealVijay Sethupathi
Comments (0)
Add Comment