“இதற்காகத் தான் ஏங்கினேன்” வானம் கொட்டட்டும் இசை விழாவில் சரத்

இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் வானம் கொட்டட்டும். இப்படத்தில் விக்ரம் பிரபு ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். தனா இயக்கியுள்ள இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய சரத்குமார்,

“தனா கதை சொன்னதும் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் இயல்பான கதையாக தோன்றியது. இப்படம் அன்றாட மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக கூறும். குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக இது இருக்கும். இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி” என்றார்.

sarathkumarVaanam Kottatum
Comments (0)
Add Comment