தனா இப்படத்தை இயக்குகிறார். மேலும், மணிரத்னம் இப்படத்தை தனாவுடன் இணைந்து எழுதியுள்ளார். பல வெற்றி பாடல்களைப் பாடி அதன் மூலம் ரசிகர்களைத் தன் வசப்படுத்திய பிரபல பாடகர் சித் ஸ்ரீராம், இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை விவேக் எழுதுகிறார்.
விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத் குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான் மற்றும் சாந்தனு ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. 2020-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.