அந்தளவுக்கு தமிழ்சினிமா ரசிகர்களை தனது அசத்தலான காமெடியால் கட்டிப்போட்ட வடிவேலு ”இம்சை அரசன் 23-ம் புலிகேசி” படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார். அந்தப் படத்துக்குப் பிறகு மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி செய்வதை நிறுத்தியவர் தொடர்ந்து ”இந்திரலோகத்தில் நா.அழகப்பன்” உட்பட சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.
ஆனால் ”இம்சை அரசன்” தவிர நடித்த எல்லா படங்களில் பெரும் தோல்வியைத் தழுவியது.
இருந்தாலும் ”கத்தி சண்ட” படத்தில் ரீ- எண்ட்ரி கொடுத்தார். ஆனால் முன்பு போல அவருடைய காமெடி எடுபடவில்லை. இதற்கிடையே இயக்குனர் சிம்புதேவன் மீண்டும் வடிவேலுவை ஹீரோவாக வைத்து இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகமாக 24-ம் புலிகேசி படத்தை ஆரம்பித்தார்.
10 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் சிம்பு தேவன், தயாரிப்பாளர் ஷங்கர் ஆகியோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்பு நின்று போனது.
தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டும் பிரச்சனை தீராததால் வடிவேலு தொடர்ந்து நடிக்க தயாரிப்பாளர் சங்கம் ரெட்கார்டு போட்டிருக்கிறது.
ஆனால் தனக்கு போடப்பட்டிருக்கும் இந்த ரெட்கார்டு சமாச்சாரத்தைப் பற்றியெல்லாம் வடிவேலு கொஞ்சமும் கவலைப்படவில்லை. மாறாக சினிமாவில் எனக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் எனக்கு எந்தக் கவலையில்லை. நான் சின்னத்திரை வழியாக ரசிகர்களின் வீட்டுக்கு நேரடியாக வரப்போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆமாம், பிரபல ஆன்லைன் வீடியோ தளமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வடிவேலுவை வைத்து வெப்சீரீஸ்களை தயாரிக்க உள்ளதாகவும், அதில் தான் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார் வடிவேலு.
வடிவேலுவில் இந்த அறிவிப்பு தமிழ்சினிமா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், இன்னொரு பக்கம் சின்னத்திரை வழியாக அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.