இளையராஜா உடன் இணையும் இயக்குநர் சுசி கணேசன்!

4 V எண்டர்டெயின்மென்ட் பிரம்மாணடமாக தயாரிக்கும் படம் ‘வஞ்சம் தீர்த்தாயடா’. இந்தப் படத்தை 80 களில் மதுரையில் நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குகிறார் சுசிகணேசன்.

இந்தப் படத்துக்கு இசை மாமேதை இளையராஜா இசையமைக்கிறார். இதற்கான ஒப்பந்தம் இன்று உறுதி செய்யப்பட்டது. இதற்காக இயக்குநர் சுசிகணேசன் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து இளையராஜாவை சந்தித்து முன் பணம் வழங்கி மரியாதை செய்தார் .

Director SusiGaneshanIlaiyaraajaVanjamtheerththaayadaa movie