சுதந்திர தின ஸ்பெஷல் : ஹிந்தியில் பிரம்மாண்டமாக ரிலீசாகிறது அஜித்தின் ‘வேதாளம்’

ந்த ஆண்டு சுதந்திர தினத்தை வட இந்தியாவில் இருக்கும் அஜித் ரசிகர்கள் சந்தோஷமாக கொண்டாடத் தயாராகி வருகிறார்கள்.

அதற்கு காரணம் அஜித் நடிப்பில் ரிலீசான வேதாளம் திரைப்படம் தான்.

அஜித் நடித்த படங்களிலேயே அதிக வசூலை அள்ளிய படம் ‘வேதாளம்’. இதில் அஜித் கால் டாக்சி டிரைவராக நடித்திருந்தார். லட்சுமிமேனன் அவருக்கு தங்கச்சியாக நடித்திருந்தார்.

தமிழில் ரிலீசான இந்தபப்டம் கமர்ஷியலாக ஹிட்டாகி பெருத்த வசூலையும் அள்ளியது.

அப்படிப்பட்ட இந்தப்படம் இந்த ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டுஆகஸ்ட் 14-ம் தேதி ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாகிறது. ஹிந்தி வெர்ஷனுக்கும் வேதாளம் என்றே டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

இதுவரை அஜித் படங்கள் வட இந்தியாவில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டதில்லை. வேதாளம் தான் முதல் படமாக ரிலீசாகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து அஜித்தின் அடுத்தடுத்தப் படங்களை ஹிந்தியிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ajithAjithkumarVedalamVedalam 2016
Comments (0)
Add Comment