8 மணி நேரத்தில் 76,000 லைக்குகள்!!! : இந்திய அளவில் சாதனை படைத்த ‘வேதாளம்’ டீஸர்

‘வீரம்’ படத்தைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘வேதாளம்’ படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

அவருடைய ஒவ்வொரு படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போகிறது.

அந்த வகையில் ‘வேதாளம்’ படத்தின் டைட்டில் அறிவிப்புக்கு ரசிகர்கள் மத்தியிள் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. நேற்று அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் டீசருக்கும் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தார்கள்.

பொதுவாக பட ரிலீசின் போது தான் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். ஆனால் இப்போதெல்லாம் படம் சம்பந்தமான எந்த விஷயமாக இருந்தாலும் அதை அஜித் ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட்டிங்கில் கொண்டு வந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்ட ‘வேதாளம்’ படத்தின் டீஸருக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து சாதனை படைத்திருக்கிறது.

யு-ட்யூப்பில் வெளியிடப்பட்ட ‘வேதாளம்’ படத்தின் டீஸரை இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். அதோடு 87,000க்கும் மேற்பட்ட லைக்குகளுடன் ட்விட்டர் ட்ரெண்ட்டிங்கில் பல மணி நேரம் நிலைத்து நின்று சாதனை படைத்திருக்கிறது.

12 மணி நேரத்துக்குள்ளாகவே ஒரு படத்தின் டீஸர் இந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருப்பது இந்திய சினிமா உலகில் இதுதான் முதல் தடவை என்கிறார்கள்.

AjithkumarVedalam
Comments (0)
Add Comment