சிவகார்த்திகேயன் படங்களில் வசூலில் மாஸ் காட்டிய ‘வேலைக்காரன்’

‘தனி ஒருவன்’ வெற்றிப் பட இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ‘வேலைக்காரன்.’

சென்ற வாரம் வெளியீடாக வந்த இந்தப்படம் ரிலீசான மூன்று நாட்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் புதிய சாதனை படைத்திருக்கிறது.

முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் 22 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கும் இந்தப்படம், சென்னையில் மட்டுமே 2.88 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சாதனை என்னவென்றால் இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசான எல்லாப் படங்களின் வசூலையும் விட இந்தப்படம் தான் அதிகம் வசூல் செய்திருக்கிறது.

அதோடு ரிலீசான முதல் நாளில் சென்னையில் ரூ.1 கோடி வரை வசூலித்த முதல் சிவகார்த்திகேயன் படமும் இதுதானாம்.

sivakarthikeyanVelaikkaranVelaikkaran Collection Report
Comments (0)
Add Comment