துல்கர் சல்மான் வெளியிட்ட “வேலன்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் SkyMan Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில் முதல் படமாக, பிக்பாஸ் முகேன் மற்றும் மீனாக்ஷி நடிக்கும் “வேலன்” படம் துவக்கம் முதலே எதிர்பார்ப்பிற்குரிய படமாக உருவாகி வந்துள்ளது. படபிடிப்பு முடிந்து, படத்தின் போஸ்ட் புரடக்சன் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், படத்திற்கு கிடைத்த மற்றொரு மகுடமாக, இந்திய அளவில் பிரபலாமான நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் “வேலன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.