Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இவ்விழாவினில் நடிகர் சிலம்பரசன் கூறியதாவது..,
என் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியானது இது தான் முதல் முறை எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. படம் இவ்வளவு வசூல் குவிக்கும் என நான் நினைக்கவில்லை. படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சி தந்துள்ளது. என்னை மாற்றிக்கொண்டு நடிக்க வேண்டும் என நினைத்தேன். முதலில் காதல் கதை தான் செய்வதாக இருந்தது இந்தக்கதை கேட்டவுடன் இதை செய்யலாம் என்றேன். இப்படம் தந்த கௌதம் மேனனுக்கு நன்றி. இவ்வளவு பெரிய படமாக மாற்றிய ஐசரி சாருக்கு நன்றி. இந்தப்படத்தின் ஒல்லியாக மாறி நடித்துள்ளேன் அதனால் சிலரால் என் உடம்பை கேலி செய்ய முடியவில்லை. ஒருவரின் உருவத்தை கேலி செய்யாதீர்கள் நான் பரவாயில்லை. ஆனால் அது அவர்களுக்கு பலருக்கு வலியை தரும். இனி அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிப்பேன். வெந்து தணிந்தது காடு பாகம் 2 ஐ ரசிகர்கள் இன்னும் ரசிக்கும்படி நல்ல ஆக்சனோடு எழுதுங்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.
#VendhuThanindhathuKaadu #வெந்துதணிந்ததுகாடு