எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் ‘வெப்பம் குளிர் மழை’!

சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன. மேலும், கடினமான பிரச்சனைகளை துணிச்சலாக எதிர்கொண்ட பல படங்கள், இயக்குநர்களின் அர்ப்பணிப்போடு பரவலான அளவில் பல தரப்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளரான திரவ்வின் வரவிருக்கும் திரைப்படமான ‘வெப்பம் குளிர் மழை’ ஒவ்வொரு பார்வையாளரிடமும் வலுவான உணர்ச்சிகளைத் தூண்டும் அத்தகைய சிக்கலை ஆராய்கிறது.எம்.எஸ்.பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ராமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இஸ்மத் பானு இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்

இத்திரைப்படம் திருமணமான தம்பதிகள் சந்திக்கும் இன்றைய சவால்களை மையமாகக் கொண்டது மற்றும் அதில் உருவாகும் சமூக தாக்கங்கள் மன, உடல் ரீதியாக உறுதியற்ற தன்மைகளை எப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உருவாக்குகின்றன என்றும் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து கூறுகிறார். படத்தின் மையக்கரு மனித உணர்வுகளின் நுணுக்கங்களையும், இருப்பின் அடிப்படைத் தன்மையையும் ஆராய்வதோடு, சமீப காலங்களில் ஒரு குறிப்பிடத்தக்க சமூக நெருக்கடியாக உருவாகியுள்ள குழந்தைப் பெற்றுக் கொள்ளுதல் பற்றிய அழுத்தமான சிக்கலையும் கையாளுகிறது.

actor M. S. Bhaskardirector Pascal vedhamuthuVeppamKulirMazhai movie