‘அந்த சிரிப்புல தான் கண்டுபிடிச்சேன்!’ : நயன்தாராவை நெகிழ வைத்த விக்னேஷ் சிவன்

 

சிம்பு, பிரபுதேவா உடனான அடுத்தடுத்த இரண்டு காதல்கள் புட்டுக் கொண்டதில் மனசு உடைந்து போனாலும், டைரக்டர் விக்னேஷ் சிவன் உடனான மூன்றாவது காதல் ரொம்ப ஸ்ட்ராங்க்காக இருப்பதில் உச்சக்கட்ட மகிழ்ச்சியோடு இருக்கிறார் நயன்தாரா.

அதோடு விக்கியை லவ் பண்ண ஆரம்பித்த பிறகு தான் தன்னுடைய படங்கள் எல்லாமே அடுத்தடுத்து ஹிட்டாகி வருகிறது என்றும் நம்பிக் கொண்டிருக்கிறார் நயன். இப்படி இந்த காதல் ஜோடியைப் பற்றி ஊடகங்கள் வரிந்து கட்டி எழுதினாலும் இருவருமே இதுவரை தங்களுக்குள் காதல் இருக்கிறதா? இல்லையா? என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இப்போது இருவர் காதலும் உண்மை தான் என்பது போல நயன் பிறந்த நாளில் தனது காதலை ஜாடைமாடையாக உறுதி செய்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

நவம்பர் 18-ம் தேதி தனது பிறந்த நாளை சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் புதுப்படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடினார் நயன்.

படப்பிடிப்பில் இருந்தாலும் அன்றைய தினம் வாழ்த்து மழைகள் பொழிந்து விட்டன. அப்படி வந்த வாழ்த்துகளில் நயனை ரொம்பவே நெகிழ வைத்தது தனது இயக்குநர் விக்னேஷ் சிவன் போட்ட பிறந்தநாள் கமெண்ட் தானாம். நயன்தாராவின் பிறந்த நாள் முடியும் சில நொடிகளுக்கு முன்பு ”அவருக்கு மட்டுமே தெரிந்த அந்த சிரிப்பில் சந்தோஷத்தையும் கண்டறிந்தேன்” என்று தன் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார் விக்னேஷ் சிவன். அதோடு நயனுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புத்தம் புதிய போட்டோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

விக்னேஷ் சிவனின் இந்த கமெண்ட்டைப் பார்த்ததும் எப்ப பாஸ் கல்யாணம் என்று கேட்டு வாழ்த்துகளை சொல்லியிருக்கிறார்கள் ரசிகர்கள்.

NayantharaNayanthara 55Nayanthara BirthdayVignesh Shivan
Comments (0)
Add Comment