தொடர்ந்து எந்த திரையுலக விழாவாக இருந்தாலும் இருவருமே மேடைகளில் ஒன்றாக காட்சியளித்தார்கள். இருவரில் யாருடைய பிறந்தநாள் வந்தாலும் உடனே ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று அதைக் கொண்டாடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்கள். அவ்வப்போது அந்தக் கொண்டாட்டப் படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தினார்கள்.
இப்படி வெளி உலகில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதல் ஜோடியாகத் தெரிந்தாலும் இருவருமே நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்று வெளிப்படையாகச் சொன்னதில்லை.
இப்படி பல ஆண்டுகளாக தனது காதல் விஷயத்தை ரகசியமாகவே வைத்திருந்த நயன் தாரா முதல்முறையாக தனது வருங்கால கணவர் பற்றி மனம் திறந்து பேசினார்.
சென்னையில் நடைபெற்ற ‘வேர்ல்ட் ஆஃப் உமன் 2018’ என்ற விழாவில் நயன்தாரா கலந்து கொண்டார். விழாவில் அவருக்கு இந்த ஆண்டிற்கான மின்னும் நட்சத்திரம் என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்டு பேசிய நயன்தாரா ”“நான் இப்போது வாங்கியுள்ள இந்த விருது சினிமா விருதுகளிடம் இருந்து மிகவும் மாறுப்பட்டது. நான் வீட்டிற்கு திரும்பியது என்னை சுற்றி பல சாதனை பெண்கள் வலம் வருவார்கள். அவர்களை பார்த்த பின்பு நான் மீண்டும் உத்வேகம் அடைந்து எனது வேலையை உற்சாகத்துடன் ஆரம்பிப்பேன். அதற்காக எனக்கு பக்க பலமாக இருக்கும் எனது தாய், சகோதரர், வருங்கால கணவருக்கு நன்றி” என்றார்.
விக்னேஷ் சிவன் பெயரைச் சொல்லவில்லை என்றாலும் அவரைத்தான் வருங்கால கணவர் என்று நயன்தாரா சொல்லியிருக்கிறார் என்று புரிந்து கொண்டு கைதட்டல்களாலும், விசில் சத்தங்களாலும் வாழ்த்துகளை தெரிவித்தார்கள் ரசிகர்கள்.
பின்னர் மேடையில் ஏறிய விக்னேஷ் சிவனுக்கு அங்கிருந்த பெரிய திரையில், நயன்தாராவுடன் அவர் எடுத்துக்கொண்ட சில போட்டோக்களை திரையிட்டனர். அந்தப் படங்களைப் பற்றி விக்னேஷ் சிவனிடம் கேட்டபோது ‘நடிகைகளில் எனக்கு ரொம்ப பேவரைட் நயன்தாரா மட்டும்தான். அவர் ஸ்ட்ராங் லேடி. அதனால்தான் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். உண்மையிலேயே நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவன்’ என்றார் வெட்கத்தோடு!