விஜய்யை பொறுத்தவரை எங்கேயும், எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார். ஏதாவது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் கூட அதிர்ந்து பேச மாட்டார்.
அப்படிப்பட்டவரை படப்பிடிப்பில் கலந்து கொண்ட அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் தேடி வந்து சமாதானம் பேச வைத்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
பரதன் இயக்கத்தில் ‘விஜய் 60’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
ஒரு படம் ஹிட்டாக வேண்டுமென்றால் அந்தப் படத்தின் ஹீரோவின் ஒத்துழைப்பு எந்தளவுக்கு தேவையோ? அதை விட டபுள் மடங்கு தேவை அந்தப் படத்தில் வேலை செய்யும் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பு.
ஆனால் ‘விஜய் 60’ படத்தைப் பொருத்தவரை அதில் வேலை செய்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்குள்ளேயே படம் பூஜை போட்ட நாளில் இருந்தே கருத்து வேறுபாடு தானாம்.
ஆரம்பத்தில் இந்த விவரம் தெரியாமல் தான் உண்டு, நடிப்பு உண்டு என்றிருந்த விஜய் காதுகளில் ‘ஈகோ’ செய்தி கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
அமைதியே உருவான அவரே களத்தில் இறங்கி விட்டார்.
எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒரு இடத்தில் ஆஜராக வைத்து ”இது நம்ம படம் அதனால் எந்த சண்டை சச்சரவும் இல்லாம வேலை செய்ங்க, உங்களோட ஒத்துழைப்பு இருந்தா தான் நம்ம எல்லோருக்கும் வெற்றி கிடைக்கும்”. என்று கேட்டுக் கொண்டாராம்.
எந்த சண்டை சச்சரவுக்கு போகாதவராக இருந்தாலும், எப்பேர்ப்பட்ட ஹீரோவாக இருந்தாலும் இது போன்ற ”சண்டைன்னா சட்டை கிழியத்தாய்யா செய்யும்” நேரங்களில் களத்தில் இறங்கத்தான் வேண்டியிருக்கிறது.
விஜய்க்கே இந்த நெலைமை!