‘விஜய் 60’ படம் பற்றி பரவும் வதந்தி : யாரும் நம்ப வேண்டாம் என தயாரிப்பாளர் வேண்டுகோள்!

விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60-வது படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாததால் ரசிகர்களும், மீடியாக்களும் ‘விஜய் 60’ என்றே டைட்டில் வைத்து இப்படத்தை அழைத்தும், எழுதியும் வருகிறார்கள்.

இதற்கிடையே இந்தப் படத்துக்கு ”எங்கள் வீட்டு பிள்ளை” என்று டைட்டில் வைக்கப்பட இருக்கிறது என்கிற செய்தி கடந்த சில தினங்களாக மீடியாக்களில் செய்திகளாக கசிந்திருக்கிறது.

மேலும் விஜய் படத்துக்கு இந்த டைட்டிலை வைக்கக்கூடாது என்று எம்ஜிஆர் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இப்படி வரும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

”இளைய தளபதி விஜய்யின் “தளபதி 60″ படத்துக்கு ”எங்க வீட்டுப் பிள்ளை” என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளது என்ற பொய்யான தகவலும் புரளியும் பரவி வருகிறது. இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தியாகும். ”எங்க வீட்டுப் பிள்ளை” என்னும் இத்தலைப்பை சூட்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இப்படத்திற்கு தலைப்பு வைப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சிலரால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரபூர்வ தகவல் எங்களிடம் இருந்து சரியான நேரத்தில் வெளிவரும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enga Veetu PillaiIlayathalapathy VijayvijayVijay 60
Comments (0)
Add Comment