விஜய் 60 சீக்ரெட் : ‘தளபதி’ ஆகிறார் ‘இளைய தளபதி’!

விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.

வழக்கமாக விஜய் நடிக்கும் புதுப்படத்துக்கான டைட்டில் படத்துக்கு பூஜை போடும் போதே அறிவிக்கப்பட்டு விடும். ஆனால் ‘தெறி’யிலிருந்து விஜய் நடிக்கிற படங்களின் டைட்டிலும் அஜித் படங்களைப் போலவே ரிலீஸ் வரை சீக்ரெட்டாக வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் விஜய் 60 படத்துக்கும் இன்னும் டைட்டில் முடிவாகவில்லை. இதற்கிடையே எங்க வீட்டுப் பிள்ளை என்கிற எம்.ஜி.ஆர் படத்தின் டைட்டில் தான் இந்தப் படத்துக்கு வைக்கப்பட இருக்கிறது என்று சில வாரங்களுக்கு முன்பு செய்தி கசிந்தது.

அதைக் கேள்விப்பட்டதும் எங்க வீட்டுப் பிள்ளை பட டைட்டிலை விஜய் படத்துக்கு வைக்கக்கூடாது என்று எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் எதற்கு தேவையில்லாத சர்ச்சை என்று யோசித்த தயாரிப்பு நிறுவனம் அந்த டைட்டிலை வைக்கும் முடிவை கை விட்டனர்.

இப்போது அதை விட விஜய் பெயருக்கு பொருத்தமான ஒரு டைட்டிலை வைக்க இயக்குநர் பரதன் முடிவு செய்திருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ரஜினி நடித்து ரிலீசாகி மெகா ஹிட்டான ‘தளபதி’ படத்தின் டைட்டில் தான் அது.

கதைக்கு மட்டுமில்லாமல் இளைய தளபதி என்கிற விஜய்யின் பட்டத்துக்கும் இந்த டைட்டில் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் விரைவில் இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

IlayathalapathyKeerthi SureshThalapathy 60vijayVijay 60
Comments (0)
Add Comment