விஜய் 63 படத்தை இயக்கப் போவது யார்? – கசிந்தது புதிய தகவல்

‘மெர்சல்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் ‘விஜய் 62’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 63-வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது தான் அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விஷயம்.

அது இயக்குனர் அட்லீயாக இருக்குமோ என்று செய்திகள் வெளியானது. ஆனால் அதை அட்லியே மறுத்து விட்டார்.

இதற்கிடையே இயக்குனர் மோகன் ராஜா சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனால் விஜய்யின் அடுத்த பட டைரக்டர் மோகன் ராஜா தான் என்று சொல்லப்பட்டு வந்தது. அதே போல விஜய் 64 வது படத்தை அமீர் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இப்படி வந்த செய்திகளை விஜய் தரப்பு முழுமையாக மறுத்துள்ளது. விஜய் எப்போதுமே ஒரு படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படம் குறித்து அறிவிப்பார். அதனால் இன்னும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு முடியாத நிலையில் அடுத்தடுத்த படங்கள் சம்பந்தமாக வரும் செய்திகள் எதுவுமே உறுதியான தகவல்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ameerMohanrajaThalapathyThalapathy 63vijayVijay 63Vijay 64
Comments (0)
Add Comment