‘வேதாளம்’ வரட்டும்! : வெறியோடு காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்

விஜய் நடித்த படங்களிலேயே இப்படி ஒரு ஆச்சரியம் எந்தப் படத்துக்கும் நிகழ்ந்ததில்லை.

அது ‘புலி’ படத்துக்கு கிடைத்திருப்பது ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

ரிலீசுக்கு முதல் நாள் வருமான வரித்துறையினரில் அதிரடி சோதனைகள் ‘புலி’ படக்குழுவுக்கு பெருத்த சோதனையாகி விட்டது.

அன்று  பட ரிலீஸுக்காக வேலைகள் எக்கச்சக்கம் என்பதால் அவைகளில் பிஸியாக இருந்தவர்களை வருமானவரித்துரை அதிகாரிகள் திடீர் கிடுக்குப் பிடி போடடனர்.

அதன் விளைவாக ரிலீஸ் அன்று காலை ஸ்பெஷல் காட்சிகள் கூட ரத்து செய்யப்பட்டன. குறிப்பிட்ட நேரத்துக்குள் தயாரிப்பாளரிடமிருந்து க்ரீன் சிக்னல் வராததால் தான் இப்படி ஒரு சிக்கல்.

அதையெல்லாம் இரவோடு இரவாக கடந்து வெற்றிகரமாக நண்பகல் காட்சியோடு காட்சிகள் ஆரம்பமானது.

முதல்நாள் படத்துக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தாலும் அன்று மாலையே படத்தைப் பற்றி சில ‘சமூகவலைத் தள பொறுக்கிகள்’ திட்டமிட்டு எதிர்மறையாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே ”இந்தப்படம் விஜய் ரசிகர்களுக்கான படம் என்பதையும் தாண்டி, அவர்கள் குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்று இயக்குநர் சிம்புதேவன் பல தடவை பேசியிருக்கிறார்.

ஆனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாத ஒரு சில ‘சமூக வலைத்தள பொறுக்கிகள்’ படத்தைப் பற்றி எதிர்மறை விமர்சனங்களை தொடர்ச்சியாக எடுத்து வைத்தனர்.

அவர்களோடு கூட்டு சேர்ந்த அஜித் ரசிகர்களும் ‘புலி’ படத்துக்கு எதிரான கமெண்ட்டுகளையும், மீம்ஸ்களையும் ட்விட்டர்களில் ஓவராகவே பரவ விட்டார்கள். இதனால் படத்தின் வசூல் சிறிதளவு பாதிக்கப்பட்டது.

ஆனால் அந்த பாதிப்பு அடுத்தடுத்த நாட்களில் குறைய ஆரம்பித்து யாருமே எதிர்பாராத வகையில் ‘புலி’யின் வசூல் சூடுபிடித்தது. இது குழந்தைகளுக்கான படம் என்ற கருத்து பரவ ஆரம்பித்தததால் வந்த முன்னேற்றமாம் அது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் ரிலீசான நான்கே நாட்களில் 32 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது ‘புலி’ திரைப்படம்.

இதற்கிடையே ‘புலி’ படத்துக்கு எதிராக தொடர்ச்சியாக ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் கமெண்ட்டுகளையும், மீம்ஸ்களையும் போட்ட அஜித் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறார்களாம் விஜய் ரசிகர்கள்.

வருகிற தீபாவளிக்கு அஜித்தின் ‘வேதாளம்’ ரிலீசாகிறது அல்லவா? அந்தப் படத்தை உறித்து தொங்க விட வெறியோடு காத்திருக்கிறார்களாம் விஜய் ரசிகர்கள்.

அவர்களின் பதிலடியை அஜித் ரசிகர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்களோ..?

வெயிட் அண்ட் ஸீ…

ajithPulivijayVijay Fans
Comments (0)
Add Comment