இப்படி ஒரு முடிவை எடுத்தே ஆகணுமாம் விஜய்?

ந்த ஒரு படத்தில் நடித்தாலும் அடுத்த படத்துக்கு போவதற்கு முன்பு மாஸ் ஹீரோக்கள் சிறிது காலம் ஓய்வெடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் போட்டி அதிகமாகி விட்டதால் எங்கே அந்த கேப்பில் வேறு ஹீரோக்களை இயக்குநர்கள் தேடிப்போக ஆரம்பித்து விடுவார்களோ என்கிற பயத்திலேயே ஓய்வுக்கு விடை கொடுத்து விட்டு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக் கிளம்பி விடுகிறார்கள்.

விஜய் கூட ‘துப்பாக்கி’யிலிருந்து அடுத்தடுத்து புதிய படங்களை கமிட் செய்து நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக ஓய்வே இல்லாமல் நடித்ததால் இப்போது கட்டாயம் ஓய்வெடுத்தே ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.

தற்போது அட்லி இயக்கத்தில் ‘தெறி’ படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். அதன் படப்பிடிப்பு வருகிற ஜுன் மாதம் ஆரம்பமாக இருக்கிறது. ‘தெறி’ படப்பிடிப்பும் இன்னும் பத்து நாட்களில் முடிய உள்ளதையடுத்து ஜூன் மாதம் வரை எந்த படத்துக்கும் கால்ஷூட் கொடுக்காமல் முழுமையான ஓய்வில் இருக்கப் போகிறார்.

இதற்காக தனது குடும்பத்தினரையும் தயார் படுத்திக் கொண்டிருக்கும் அவர் அதன்பிறகு தான் புதுப்படங்களை கமிட் செய்வாராம்!

TherivijayVijay 60
Comments (0)
Add Comment