தன் அபிமான ஹீரோ தமிழகத்தை ஆள வந்தால் ரசிகர்களுக்கு கசக்குமா என்ன?
ரஜினி, கமல், விஜய், அஜித் இந்த நான்கு பேரில் யார் அரசியலுக்கு வருவார் என்கிற குழப்பமான கேள்விக்கு கமல் நான் கண்டிப்பாக வருவேன் என்று உறுதியான பதிலைச் சொன்னதோடு மட்டுமில்லாமல் அதற்காக ஆயத்தப் பணிகளிலும் இறங்கி விட்டார்.
ரஜினி போர் இன்னும் வரவில்லை என்று ஒதுங்கி விட்டார்.
விஜய்யோ மெர்சல் படத்தில் பேசிய அரசியல் வசனங்களைப் பார்த்து ஆளப்போறான் தமிழன் என்ற பாடலையும் பார்த்து அவரும் அரசியலுக்கு வருவார் போலிருக்கிறது என்று ஆளாளுக்கு ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் வீட்டைத் தவிர வேறு எந்தப் பக்கமும் எட்டிக் கூட பார்க்காத அஜித் தமிழக அரசியலில் இறங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது என்று அவருடைய ஜாதகத்தை கணிக்கிறார்கள் ஜோதிடர்கள்.
இந்தப் பரபரப்புக்கிடையே குமுதம் மற்று நியூஸ் 7 தொலைக்காட்சி இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் கமலுக்கு அதிக ஆதரவு கிடைத்திருக்கிறது. ரஜினிக்கு மக்களின் ஆதரவு குறைந்திருக்கிறது.
ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய் 14 சதவீதம் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
அப்படியானால் அவருடைய சரிசம போட்டியாளரான அஜித்துக்கு எவ்வளவு பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்? என்கிற கேள்வி இயல்பாகவே எழும்.
ஆனால் இந்த லிஸ்ட்டில் அஜித்தின் பெயரே இடம்பெறவில்லை என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் விஜய்க்காவது 14 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அஜித் பெயரோ லிஸ்ட்லயே இல்லையாமே? என்று நக்கலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.