தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய்.
இவருடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் மக்களுக்கு பல்வேறு நற்பணிகளும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட கன்னியாகுமரியின் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெற்றனர்.
இந்நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தளபதி விஜய் பற்றிய “THE ICON OF MILLIONS” என்று ஆங்கிலத்திலும் “கோடிக்கணக்கான மக்களின் அடையாளன் ” என்ற பெயரில் தமிழிலும் புத்தகம் வெளியிடப்பட்டது. சமீபத்தில் சென்னையில் நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அதேபோல விஜய்க்காக ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றும் அவரது ரசிகர் விஷால் ராகவ் என்பவரால் உருவாக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது.
இந்த ஆண்ட்ராய்டு ஆப் “SMACAR” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் ஆண்ட்ராய்டு மொபைல்களில் PLAYSTORE இல் DOWNLOAD செய்து பயன்படுத்தலாம்.
இந்த ஆப்பில் என்ன ஸ்பெஷல் தெரியுமா? இந்த ஆப் மூலமாக போட்டோ எடுத்தால் நடிகர் விஜய்யுடன் செல்பி எடுப்பதுபோல் காட்சியளிக்குமாம்.
செம…செம…