ரஜினி பட டைட்டில்! : விஜய் சேதுபதிக்கு கொடுத்து வெச்சுருக்கு!

ஜினியின் பழைய ஹிட் படங்களின் டைட்டிலை தங்கள் புதுப்படங்களில் வைக்க இப்போதுள்ள இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

பாபிசிம்ஹாவிலிருந்து ஜி.வி.பிரகாஷ்குமார் வரை பலரும் ரஜினி பட டைட்டிலை கைப்பற்றுவதில் போட்டி போட்டாலும் தனுஷைத் தவிர மற்றவர்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை.

சமீபத்தில் தனது புதுப்படத்துக்கு ரஜினியின் தங்க மகன் பட டைட்டிலை அறிவித்தார் தனுஷ்.

அவரைத் தொடர்ந்து இப்போது கொடுத்து வெச்ச ஆளாகியிருக்கிறார் விஜய் சேதுபதி.

ஆமாம், ஸ்டுடியோ 9 புரொடக்‌ஷன் சார்பில் ஆர்.கே. சுரேஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் புதுப்படம் ஒன்றை சீனு ராமசாமி இயக்குகிறார். இந்தப்படத்துக்கு ரஜினியின்

ஹிட் படங்களில் ஒன்றான தர்ம துரை டைட்டிலை வைத்திருக்கிறார்கள்.

சலீம் வெற்றிக்குப் பிறகு ஸ்டுடியோ 9 புரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகி உள்ளதையடுத்து படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு டிசம்பர் 15 ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

Vijay Sethupathi New Movie Title Dharma Durai
Comments (0)
Add Comment