எத்தனை கலை வாரிசுகள் அறிமுகமானாலும் விஜய் மாதிரியான மாஸ் ஹீரோவின் வீட்டு வாரிசு என்றாலே ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம் தான்.
ஏற்கனவே ‘வேட்டைக்காரன்’ படத்தின் ஓப்பனிங் சீனில் தலை காட்டிய விஜய் மகன் சஞ்சய் அதன்பிறகு எந்த படத்திலும் தலை காட்டவில்லை.
ஆனால் இப்போது தெறி ரிலீஸ் உற்சாகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக தெறி படத்தில் மீண்டும் தோன்றுகிறாராம் சஞ்சய்.
அதோடு இன்னொரு சர்ப்ரைஸ் தகவலும் உண்டு.
முன்னதாக தெறி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் அட்லி இந்தப்படம் மிகவும் யதார்த்தம் நிறைந்த ஒரு சாதாரண போலீஸ் கதை. படத்தில் பல விஷயங்களை நான் சொல்லியிருக்கிறேன். எந்தக் குழந்தையும் தானாக எந்த தவறும் செய்வதில்லை. அவர்கள் வளர்க்கப்படும் சூழல் தான் அவர்களை தவறு செய்யத் தூண்டுகிறது.
ஆக எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை கவனமுடன் நல்ல பிள்ளைகளாக வளர்க்க வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறேன், இந்தப் படத்தில் காமெடிக்கென்று யாரும் தனியாக இல்லை. ஆனால் விஜய், நைனிகா, ராதிகா சரத்குமார், சமந்தா இவர்கள் வரும் காட்சிகள் எல்லாமே அந்த இடத்தை நிரப்பும் என்றவரிடம் அந்த சீக்ரெட் கேள்வி கேட்கப்பட்டது.
இதில் விஜய் சாரில் மகன் சஞ்சய்யும், மகள் திவ்யாவும் நடித்திருக்கிறார்களாமே? என்பது தான் அந்தக் கேள்வி?
அதற்கு பதிலளித்த அட்லி “ அந்த ரகசியத்தை நான் பட ரிலீஸ் வரை தெரியாமல் வைத்திருக்க நினைத்தேன். ஆனால் நீங்களே சொல்லிட்டீங்க… பட் இருந்தாலும் அவங்க இருக்காங்களா? இல்லையான்னு நான் சொல்ல முடியாது. படம் ரிலீஸ் ஆன உடனே நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கங்க. ஆனா கண்டிப்பா அப்படி ஒரு சர்ப்ரைஸ் இந்தப் படத்துல விஜய் ரசிகர்களுக்கு இருக்குங்கிறது உண்மை என்றார் சிரித்துக் கொண்டே…
அப்போ தியேட்டரே தெறிக்கப் போகுது!!!