அன்றைய தினம் அவரது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட விஜய் ரசிகர்கள் பல நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட திட்டமிட்டு தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார் விஜய். அதுமட்டுமல்ல தமிழகம் முழுக்க இருக்கிற தனது நற்பணி இயக்கங்களுக்கும் இந்த ஆண்டு தனது பிறந்தநாளில் எந்தவித கொண்டாட்டமும் தேவையில்லை என்றும் கட்டளையிட்டிருக்கிறார்.
ஏன் இந்த திடீர் முடிவு என்று விசாரித்தால் தூத்துக்குடி கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது தான் காரணம் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.
சில தினங்களுக்கு முன்பு தான் தூத்துக்குடிக்கு சென்ற விஜய் எந்தவித ஆர்ப்பாட்டமும், ஆராவாரமும் இல்லாமல் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனவர்களின் குடும்பத்தினர்களையும், காயம்பட்டவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதலும், நிதி உதவியும் அளித்து வந்தார்.
அப்போது தூத்துக்குடி மக்களின் வேதனையை முழுமையாக உணர்ந்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்கிற முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள்.
ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்தநாளில் தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, படத்தின் டைட்டிலையும் அறிவிக்க திட்டமிட்டிருந்தார்கள். தற்போது பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று விஜய் முடிவு செய்திருப்பதால் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடும், பட டைட்டில் அறிவிப்பும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் வேலைகள் முடிந்து விட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா செல்கின்றனர்.