நடிகர் விஜய் எப்போதுமே தனது ரசிகர்கள் மீது தனி அன்பும், பாசமும் வைத்திருப்பவர்.
ஐந்து நாட்களுக்கு முன்பு ‘புலி’ படம் ரிலீசானது. அப்போது தாம்பரம் அருகே மணிமங்கலத்தை சேர்ந்த விஜய்யின் ரசிகர்கள் சவுந்தர்ராஜன் மற்றும் உதயகுமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது லாரி மோதி சம்பவ இடத்திலே உயிர் இழந்தனர்.
இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட விஜய் இன்று காலை 6-ம் தேதி அதிகாலை 6 மணிக்கு இறந்து போன ரசிகர்கள் சவுந்தர்ராஜன் மற்றும் உதயகுமார் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் பெற்றோரிடம் விசாரித்து ஆறுதல் கூறி பண உதவியும் வழங்கியிருக்கிறார்.
மேலும் அவர்களிடம் தங்கள் குடும்பத்திற்கு ஏதேனும் உதவி வேண்டும் என்றால் தயங்காமல் என்னிடம் கூறுங்கள். கண்டிப்பாக நான் உங்களுக்கு உதவ கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியிருக்கிறார்.
விஜய்யின் அன்பின் நெகிழ்ந்து போன ரசிகர்களின் பெற்றோர்கள் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு அழ அங்கே ஒரு நெகிழ்ச்சியான தருணங்களைப் பார்த்து அருகில் இருந்தவர்களும் கண்கலங்கி விட்டார்களாம்.