ஆஹா… இதுவல்லவோ பாசம்!! – அப்பாவுக்காக கைகளில் பச்சைக் குத்தி சண்முக பாண்டியன்!

‘கேப்டன்’ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் கலைத்துறையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

அதை கொண்டாடும் விதமாக சமீபத்தில் அவருக்கு காஞ்சிபுரத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு விஜயகாந்த்தின் திரையுலக சாதனைகளையும், அவருடைய மனித நேய செயல்களையும் பாராட்டிப் பேசினர்.

அப்படிப்பட்ட இந்த சிறப்பான விழாவில் அவரது இளைய மகனும் நடிகருமான சண்முகப் பாண்டியன் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை. விழா நடந்த போது அவர் லண்டனில் இருந்தார்.

தற்போது சென்னை திரும்பியிருக்கும் அப்பாவின் 40 ஆண்டுகால கலைச்சேவைக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவருடைய இரண்டு கண்களை கைகளில் பச்சைக் குத்தியிருக்கிறார். பச்சைக் குத்திய கைகளை அவரிடம் நேரில் காண்பித்து அவருக்கு வாழ்த்து கூறினார்.
பிறகு அவரிடம் ஆசியும் பெற்றார்.

Shanmuga PandianVijayakanthVijayakanth Son
Comments (0)
Add Comment