‘தளபதி 64’ படத்தில் சூப்பர் ஹீரோவாகும் விஜய்!

விஜய் நடிக்கப் போகும் 64-வது படத்தை ‘மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்பது உறுதியாகி விட்டது.

தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ ஆகியோருடன் மட்டுமே அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய் திடீரென்று புதுமுக இயக்குனர்களுடன் கை கோர்த்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

அட்லீ படத்துக்குப் பிறகு நடிக்கப் போகும் புதுப்படத்துக்கு பல இயக்குனர்களிடம் கதையை கேட்டு வந்தார் விஜய். அதில் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை விஜய்க்கு ரொம்பவே பிடித்துப் போயிருக்கிறது.

மேலும் லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து தற்போது இயக்கி வரும் ‘கைதி’ படத்தின் சில காட்சிகளையும் பார்த்து திருப்தி அடைந்திருக்கிறார். அதோடு அந்தப்படத்துக்கு 65 நாட்கள் வரை தேதிகளை கேட்டு கார்த்தியின் காட்சிகளை 35 நாட்களிலேயே முடித்துக் கொடுத்திருக்கிறார்.

அதே சமயம் இந்தப்படத்தை விஜய்யின் நெருங்கிய உறவினர் தயாரிக்கிறார். ஆக கிட்டத்தட்ட சொந்தப்படம் போல் ஆகி விட்டதால் பட்ஜெட்டும் அதிகமாகி விடக்கூடாது, படமும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் ஆகிய காரணங்களுக்காகவே லோகேஸ் கனகராஜை விஜய் டிக் செய்ததாக சொல்கிறார்கள்.

பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் தயாரிப்பு மேற்பார்வை செய்கிறார்கள்.

சூப்பர் ஹீரோ சம்பந்தப்பட்ட கதையாக தயாராகும் இப்படத்தில் துளிகூட அரசியல் கிடையாது. மாறாக முழுக்க முழுக்க காமெடி, செண்டிமெண்ட் கலந்த கமர்ஷியல் படமாக இருக்குமாம்.

படத்துக்காக விஜய் 100 நாட்கள் வரை கால்ஷீட் ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Lokesh KanagarajMovie Newsvijay
Comments (0)
Add Comment