”அதுக்கு காரணம் நான்தான்” – சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்!

விக்ரம் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசான ‘ஸ்கெட்ச்’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது, பாக்ஸ் ஆபீசிலும் சேர்ந்திருக்கிறது. அந்த சந்தோஷ செய்தியை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ள பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் விக்ரம்.

ஸ்கெட்ச் படத்தைப் பார்த்த அத்தனை பேரும் இந்த வயசிலும் இப்படி நடிக்கிறாரே? என்று விக்ரமின் நடிப்பை வியந்து பேசுகிற அதே வேளையில் பிரபல காமெடியன் சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைவாக இருந்தது கண்டும் அதிர்ச்சியடைந்தார்கள்.

தமிழ்சினிமாவில் தற்போதைக்கு சூரியை விட்டால் பக்கத்தில் வைத்துக் கொண்டு காமெடி செய்ய காமெடி நடிகர்கள் இல்லாத சூழலில் சூரியை ஏன் இப்படி ஊறுகாய் மாதிரி ஸ்கெட்ச் படத்தில் தொட்டிருக்கிறார்கள் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாகவும் இருந்தது.

அந்த சந்தேகத்துக்கு சந்திப்பில் பதிலளித்த விக்ரம் சூரியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து விக்ரம் மேலும் பேசுகையில்,‘ ஒரு நல்ல மெசேஜும் சொல்ல வேண்டும், அதே சமயம் அது கமர்ஷியலாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்து, அதற்காக கதைகளை கேட்டுக் கொண்டிருந்தேன். கேமராமேன் சுகுமார் மூலமாக டைரக்டர் விஜய் சந்தர் அறிமுகமாகி, என்னிடம் கதையைச் சொன்னார். அந்த கதையை கேட்டவுடன் பிடித்து விட்டது.

இந்த படத்தோட ஃபர்ஸ்ட் ஓபனிங்கே ‘கனவே கனவே..’ என்ற பாடலோடத்தான் ஆரம்பிச்சது. இந்த படத்துக்கு என்னோட ரசிகர்கள் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது. ஒவ்வொரு வீடியோவ சோசியல் மீடியாவுல அப்லோட் பண்றதிலிருந்து, ஸ்கெட்ச்சோட டீ சர்ட்ட போட்டுகிட்டு டான்ஸ் ஆடிகிட்டே படம் பாத்து என்ஜாய் பண்றது வரைக்கும் அதைப் பார்க்கிறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. ஒவ்வொரு ரசிகர்களும் அவங்க வீட்ல ஒருத்தர என்ன கொண்டாடுறது எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட்.

என்றவர் சூரி விவகாரத்துக்கு வந்தார்…இந்தப் படத்தில் சூரி குறைவான காட்சிகளில் தான் வருவார். சூரி நடித்த காட்சிகள் படத்தில் குறைக்கப்பட்டதற்கு காரணம் நான் தான். அவரிடம் அதைப் பற்றி சொன்னதும் பெரிய மனது பண்ணி சரியென்றார். இதற்கு பிரயாசித்தமாக மற்றொரு படத்தில் அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார். இல்லையென்றால் இரண்டு பேரும் ஹீரோவாகவும் நடிக்க ரெடி. இல்ல இன்னொரு படத்துல அவர் கூட சேர்ந்து நடிக்கணும். இருந்தாலும் சூரி ஒரு பர்பெக்ட் ஜென்டில்மேன். படப்பிடிப்புக்கு வருவது தெரியாது. போவதும் தெரியாது. வேகமா போற திரைக்கதையில இவரோட சீன் ஸ்பிடு பிரேக் மாதிரி இருந்ததால தூக்கிட்டோம். இதுக்கு காரணம் நான் தான். அதுக்காக சூரிகிட்ட நான் ஸாரி கேட்டுகிறேன். இந்த படத்திற்காக உழைத்து அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார் விக்ரம்.

Chiyaan VikramSketchSketch Success MeetSketch Success Meet NewsSooriVikram
Comments (0)
Add Comment