கதையை கேட்டதோட சரி… : பிரம்மன் இயக்குநரை புலம்ப விட்ட விக்ரம்!

லவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் ரசிகர்கள் கொடுத்த மகத்தான ஆதரவால் 50 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம் நடித்த ‘இருமுகன்.’

ஆக படம் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டது. இந்த தருணம் விக்ரமுக்கு சந்தோஷத்தை தந்தாலும் அவரை நம்பி கதை சொல்லப்போன ஒரு இயக்குநரோ புலம்பிக் கொண்டிருக்கிறார்.

முன்னதாக ‘இருமுகன்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே ‘பிரம்மன்’ பட இயக்குநர் சாக்ரடீஸ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் சொல்லியிருந்தார் விக்ரம். அதற்காக அவரிடம் கதையெல்லாம் கேட்டார். கேட்ட மாத்திரத்தில் கண்டிப்பாக இந்தக் கதையில் நடிக்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத்து விட்டு வந்தவர் தான் இன்று வரை சாக்ரடீஸ் போனுக்கு ரெஸ்பான்ஸே செய்யவில்லையாம்.

 யாரு பிரம்மன் டைரக்டரா? யோசிச்சு பண்ணுங்க சீயான் என்று விக்ரமை சிலர் அலர்ட் செய்ததால் இப்படி ஒரு முடிவை எடுத்தாராம். அதோடு இருமுகன் தயாரிப்பாளர் சிபு தமீம்ஸ் ஹரி இயக்கத்தில் சாமி 2 படத்தை தயாரிக்க முன் வந்ததால் ரூட்டு சரியாத்தானே போகுது என்று அமைதியாகி விட்டார் விக்ரம்.

அய்யோ பாவம்… பார்க்கிறவர்களிடமெல்லாம் இந்த சம்பவத்தை சொல்லி சொல்லியே புலம்பிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சாக்ரடீஸ்!

Chiyaan VikramDirector SocratesVikram
Comments (0)
Add Comment