விக்ரம் – அஜய் ஞானமுத்து கூட்டணியில் ஆக்‌ஷன் த்ரில்லர் படம்!!

‘கடாரம் கொண்டான்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கப் போகும் புதிய படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

7ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமாரும், வையாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

தான் இயக்கிய ”டிமாண்டி காலனி”, ”இமைக்கா நொடிகள்” ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய் ஞானமுத்து. நடிப்பு என்ற மகத்தான கலைக்காக தன் சப்த நாடிகளையும் திரையில் ஒப்படைக்கும் கம்பீர மனம் படைத்தவர் விக்ரம்.

இந்த இருவரும் ஒன்றிணையும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 2020-ல் சம்மர் கொண்டாட்டமாக ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது.

மற்ற நட்சத்திரங்கள் யாரெல்லாம் இப்படத்தில் இருக்கிறார்கள் என்ற தகவலும் டெக்னிஷியன்ஸ் டீம் யார் யார் என்ற தகவலும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

ஆக்‌ஷன், த்ரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப்பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராக இருப்பதால் இந்திய சினிமாவில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Movie NewsR.Ajay GnanamuthuVikram
Comments (0)
Add Comment