என்னாச்சு விக்ரமுக்கு? – ஆளே அடையாளம் தெரியல.!

கேரக்டருக்காக உடலை வருத்திக் கொண்டு நடிப்பதில் கொஞ்சமும் சளைக்காதவர் நடிகர் விக்ரம். பாலா டைரக்‌ஷனில் ‘சேது’, ஷங்கர் டைரக்‌ஷனில் அவர் நடித்த ‘ஐ’ ஆகிய படங்களே இதற்கு மிகப்பெரிய சான்றுகள்.

அந்தளவுக்கு சிறிய கேரக்டராக இருந்தாலும் அதற்காக தன்னையே வருத்திக் கொள்ளும் விக்ரம் தற்போது ஹரி டைரக்‌ஷனில் ”சாமி 2” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்திலும் முதல் பாகத்தைப் போலவே போலீஸ் அதிகாரியாகத்தான் வருகிறார் விக்ரம். ஆனால் இந்தப்படம் அந்தப் படத்தின் தொடர்ச்சி அல்ல என்று கூறியிருக்கிறார் டைரக்டர் ஹரி.

அப்படியானால் இந்தப்படம் எப்படியிருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, ‘சாமி 2’ படத்துக்காக ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் விக்ரம்.

இன்றைக்கும் நேரில் பார்த்தால் இளமையாக காட்சியளிக்கும் விக்ரம் அந்த வீடியோவில் வயசானவர் போல முக லட்சணம் முழுவதுமாக மாறிப்போய் வயதானவர் போல காட்சி தருகிறார். இந்த வீடியோவை வெளியிட்ட விக்ரம் இந்த வீடியோவில் இருப்பது யாரென்று தெரியவில்லை என்று வேறு கூறியிருப்பது அவரது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒருவேளை ‘சாமி 2’ படத்தில் வரும் விக்ரமின் இன்னொரு வயதான கேரக்டருக்கான தோற்றமாக இருக்குமோ? என்றும் அவர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள்.

ChiyaanChiyaan VikramSaamy 2Saamy SquareVikramVikram GetUp
Comments (0)
Add Comment