தமிழ் – ஹிந்தியில் பிரம்மாண்டப் படம்! – கர்ணனான மிரட்ட வரும் விக்ரம்

விக்ரம் நடிப்பில் ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக ரிலீசாக உள்ளது. தொடர்ந்து ‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடியும் நிலையில் உள்ளது. புதிதாக தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் விக்ரம் அடுத்து பிரம்மாண்டமான படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ஆர்.எஸ்.விமல் இயக்கும் இப்படத்திற்கு ‘மஹாவீர் கர்ணா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம் விக்ரம்.

தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிப்படமாக தயாராகும் இப்படத்தை சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில், நியூயார்க்கை சேர்ந்த யுனைடெட் கிங்டம் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

ஹிந்திப் பதிப்பிற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. உலக அளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றப் போகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. படத்தை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Chiyaan VikramMahavir KarnaRS VimalVikram
Comments (0)
Add Comment