கடந்த சில மாதங்களாகவே இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் விஷாலின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் தமிழ்சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் விஷால் – அனிஷாவின் நிச்சயதார்த்த மேடை அலங்காரம் நெட்டிசன்களின் மத்தியில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
மேடை அலங்காரத்தைப் பார்த்தவர்கள் தமிழ் ராக்கர்ஸ் லோகோ போல் இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டனர். அப்போ விஷால் தான் தமிழ் ராக்கர்ஸோட ஓனரா என்றெல்லாம் கேள்வி எழுப்பி விமர்சித்தனர்.
அதே சமயத்தில் தமிழ் ராக்கர்ஸ் பெயரில் இயங்கும் ட்விட்டர் கணக்கிலும் மச்சானுக்கு வாழ்த்துகள் என்று நடிகர் விஷால் – அனிஷாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.