நடிகர் சங்கத்தில் ஊழலா? ஆதாரம் இருந்தால் நிரூபிக்கட்டும் : விஷால் ஆவேசம்

ந்த ஆண்டு தனது பிறந்த நாளை அதே உற்சாகத்தோடு கொண்டாடிய விஷால் திடீரென்று கிளம்பிய நடிகர் சங்கத்தின் ஒரு பிரிவினரின் ஊழல் புகாருக்கும் பதிலளிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

வாராகி என்கிற நடிகர் சங்க உறுப்பினரும், அவரது ஆதரவாளர்களும் விஷால் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள் மீது சுமார் 3 கோடி ரூபாய் வரை ஊழல் குற்றச்சாட்டைச் சொல்லி நடிகர் சங்கக் கட்டிடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி சில தினங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

நடிகர் விஷால் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி அரிமா சங்கம் மற்றும் M.P.S.பாலி கிளினிக் இனைந்து நட த்திய இலவச குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசிய விஷாலிடம் ஊழல் புகார் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது பேசிய விஷால்… நடிகர் சங்கத்தை பற்றி குறை கூறுபவர்கள் ஆதாரம் இருந்தால் நிருபிக்கட்டும் பழைய முறைகேடுகள் பற்றிய எல்லா தகவல்களையும் இன்னும் 10 நாட்களில் நாங்கள் வெளியிடுவோம்.

வாராஹியிடம் ஏதாவது ஆதாரம் இருப்பின் அவர் என்னை வந்து நேரடியாக சந்திக்கட்டும். யார் வேண்டுமானாலும் என்ன குற்றசாட்டுகளை வேண்டுமானாலும் கூறலாம் அதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். நாங்கள் இன்னும் டெண்டரை விடவில்லை எங்களுக்கு இன்னும் சி.எம்.டி.ஏ அனுமதி வரவில்லை. வாராஹி சொல்வதில் உண்மை இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இதுவரை எந்த கடிதமும் எனக்கு வரவில்லை , நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. என்றார் ஆவேசமாக…

Nadigar SangamvishalVishal BirthdayVishal Birthday Celebration
Comments (0)
Add Comment