ஜல்லிக்கட்டை அனுமதிக்க கோரிக்கை : மோடியை சந்திக்கிறார் விஷால்!

ல்லிக்கட்டுக்காக இளைஞர்களும், மாணவர்களும் தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் தன்னெழுச்சியான போராட்டத்துக்கு நாடு தாண்டி ஆதரவுக் கரங்கள் நீண்டு வருகிற நிலையில் திரையுலகினருன் போராட்டங்களை அறிவித்திருக்கிறார்கள்.

த்ரிஷா, ஆர்யா உள்ளிட்ட திரையுலகினர் சிலர் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிய பன்னாட்டு அமைப்பான பீட்டா அமைப்புக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு தமிழக இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பாக இருந்து வருகிறது. இந்த லிஸ்ட்டில் விஷாலின் பெயரும் அடிபட்டு வந்தாலும் அவர் உட்பட த்ரிஷா, ஆர்யா உள்ளிட்ட அத்தனை நட்சத்திரங்களும் நாங்கள் என்றைக்குமே பீட்டா அமைப்புக்கு ஆதரவு தரவில்லை என்று தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்து விட்டார்.

இருந்தாலும் தன் மீதான இந்த பேட் இமேஜை நொறுக்கும் விதமாக ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி தரும்படி பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் விஷால்.

இதுகுறித்து அவர் பிரதமருக்கு இன்று எழுதிய கடிதத்தில் ”ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை. அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தடையை நீக்க நீங்கள் (பிரதமர்) நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக நேரில் பேச எனக்கு நேரம் ஒதுக்கி தர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கடிதம் பிரதமர் அலுவலகத்தின் பேக்ஸ், பதிவு தபால், இ-மெயில் ஆகியவற்றின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

Actor VishalBan PETABan Peta IndiaJallikattuModiNarendra ModiSave Jallikattuvishal
Comments (0)
Add Comment