அந்த படத்தைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் தயாராகும் புதுப்படத்துக்கு அயோக்யா என்று டைட்டில் வைத்துள்ளனர். வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி. மது தயாரிக்கிறார். ஆகஸ்ட் 23-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!
இதில் தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டி , கலைப்புலி எஸ். தாணு , ரவி பிரசாத் , கே.எஸ் ரவிக்குமார் , காட்ராகட்ட பிரசாத் , கிருஷ்ணா ரெட்டி , இயக்குனர்கள் ஏ.ஆர். முருகதாஸ், லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராக்ஷி கண்ணா நடிக்கிறார். இவர்களுடன் ரா. பார்த்திபன் , கே.வி ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
படத்துக்கு இசை சாம் சி.எஸ், கேமரா ஆர் கார்த்திக் , கலை எஸ்.எ.ஸ் மூர்த்தி , எடிட்டிங் ரூபன், ஸ்டண்ட் ராம் , லக்ஷ்மன் , நடனம் பிருந்தா, ஷோபி, காஸ்டியூம் உத்தாரா மேனன். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது.