விஷாலின் அடுத்த படம் ஆரம்பம்

Get real time updates directly on you device, subscribe now.

‘இரும்புத்திரை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விரைவில் விஷாலின் நடிப்பில் ’சண்டக்கோழி 2’ திரைப்படம் வெளியாக உள்ளது.

அந்த படத்தைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் தயாராகும் புதுப்படத்துக்கு அயோக்யா என்று டைட்டில் வைத்துள்ளனர். வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி. மது தயாரிக்கிறார். ஆகஸ்ட் 23-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

இதில் தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டி , கலைப்புலி எஸ். தாணு , ரவி பிரசாத் , கே.எஸ் ரவிக்குமார் , காட்ராகட்ட பிரசாத் , கிருஷ்ணா ரெட்டி , இயக்குனர்கள் ஏ.ஆர். முருகதாஸ், லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts
1 of 65

படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராக்‌ஷி கண்ணா நடிக்கிறார். இவர்களுடன் ரா. பார்த்திபன் , கே.வி ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

படத்துக்கு இசை சாம் சி.எஸ், கேமரா ஆர் கார்த்திக் , கலை எஸ்.எ.ஸ் மூர்த்தி , எடிட்டிங் ரூபன், ஸ்டண்ட் ராம் , லக்ஷ்மன் , நடனம் பிருந்தா, ஷோபி, காஸ்டியூம் உத்தாரா மேனன். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது.