2.0 வில் நடிப்பாரா..? : எமி ஜாக்சனுக்கு திடீர் சிக்கல்

தெரிந்து தான் இதையெல்லாம் செய்கிறோமா? என்பதே தெரியாமல் தான் இருக்கிறது சிலரின் நடவடிக்கைகள்.

அழகான நாய்க்குட்டிகளையும், பூனைக்குட்டிகளையும் மட்டுமே தேர்ந்தெடுத்து வளர்க்கும் ‘விலங்குகள் நல பாதுகாப்பு’ கனவான்கள் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக கிளம்பியிருப்பது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தின் சீரியஸ்னஸ் தெரியாமலேயே எமி ஜாக்சன் போன்ற நடிகைகள் விலங்குகளை காக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து இப்போது அதனால் ரஜினிக்கு, இயக்குநர் ஷங்கருக்கும் நெருக்கடியை கொடுத்திருக்கிறார்.

இது குறித்து தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது :

‘எந்திரன் 2’ படத்தில் நடிக்கும் கதாநாயகி எமிஜாக்சனை படத்தில் இருந்து நீக்கியதாக அறிவிக்க வேண்டும்.

இல்லையெனில் வரும் 21-ம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நடக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் முற்றுகை போராட்டம் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் வீடு முற்றுகை போராட்டமாக மாறும்.

‘எந்திரன்-2’ படப்பிடிப்பு இடத்தை எல்லாம் தமிழர் முன்னேற்றபடை ஆர்ப்பாட்டம் செய்யும்

நடிகை எமிஜாக்சன் ‘எந்திரன்-2’ படப்பிடிப்பில் தமிழ்நாட்டில் இருந்து கொண்டே தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவரின் ட்விட்டர் பக்கத்திலும் அதை வலியுறுத்தியுள்ளார்.

எங்கள் தமிழ் மண்ணில் பிழைப்புக்காக வரும் நடிகர், நடிகைகள் எல்லாம் பணம் சம்பாதித்தது போக எங்கள் பண்பாட்டிலும் மூக்கை நுழைப்பது இனி எங்கள் காலத்தில் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொழைக்க வந்த இடத்துல எதுக்கு இந்த தேவையில்லாத வேலை எமி?

2PointOAmy JacksonDirector ShankarRajinikanthஎந்திரன் 2
Comments (0)
Add Comment