வெப் படத்துக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல்!

வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்  திரில்லர் படம் ‘வெப்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன்  இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார்.  ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த ‘ஓ சொல்றியா மாமா..’ பாடலை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா ‘வெப்’ படத்துக்காக
“வீக் டே ஃபுல்லா வேலை செய்ய கழுத்துல டைய்..
வீக்கெண்ட் வந்தா ஏத்திக்கிட்டு ஆகிடலாம் ஹை..
இரவு முடியும் வரை… நீ ஆடு.. ”
எனும் பப் பாடலை பாடியுள்ளார்.

Actor Nataraja Subramaniactress shilpa manjunathdirector haroonweb movie