‘விஜய் 63’ படத்தை இயக்கப் போவது யார்? – பரபரப்பான புதிய தகவல்

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார்.

‘விஜய் 62’ படமாக தயாராகி வரும் இப்படத்தைத் தொடர்ந்து அவருடைய 63-வது படத்தை இயக்கப் போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

அமீர் உட்பட பல முன்னணி இயக்குனர்களின் பெயர்களும் அடிபட்டு வந்த நிலையில், மீண்டும் அட்லிக்கே விஜய்யை வைத்து இயக்குகிற வாய்ப்பு கிடைத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆமாம், விஜய் 63 படத்தை அட்லீ தான் இயக்கப் போகிறாராம். ஏ.ஜி.எஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

முன்னதாக ‘மெர்சல்’ படத்தை முடித்த கையோடு விஜய்யை வைத்து மீண்டும் இயக்க ஆசைப்பட்ட அட்லீ அவரிடம் வீடு தேடி சென்று வாய்ப்பு கேட்டார்.

ஆனால் படப்பிடிப்பில் அதிக செலவுகளை இழுத்து வைக்கிறார், படம் வெற்றிகரமாக ஓடியும் தயாரிப்பாளர்களுக்கு பைசா லாபமில்லை, இதனால் தயாரிப்பாளர்கள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு அட்லீ மீது தொடர்ந்து வைக்கப்பட்டது. இதனாலேயே தன்னைத் தேடி வந்த அட்லீயை வேண்டாம் என்று விஜய் முடிவு செய்ததாக கூறப்பட்டது.

ஆனால் இடையில் என்ன நடந்ததோ? மூன்றாவது முறையாக தன்னை இயக்குகிற வாய்ப்பை அட்லீக்கு கொடுத்திருக்கிறார் விஜய். இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய் 50 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Director AtleeThalapathy 63vijayVijay 63
Comments (0)
Add Comment