யாரா இருக்கும் அந்த மியூசிக் டைரக்டர்? : தனுஷ் ரசிகர்களை தவிக்க விட்ட கௌதம் மேனன்

டந்த ஒரு வார காலமாகவே கோலிவுட் ரசிகர்கள் இந்தக் கேள்வியைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆமாம், கெளதம் மேனன் இயக்கத்தில் முதல் முறையாக தனுஷ் இணைந்திருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், டீஸர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரலாகியது.

வழக்கமாக படத்தின் டைட்டிலை ரகசியமாக வைத்து வைரலாக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், கெளதம் மேனன் இப்படத்தின் டீஸரை வெளியிட்டபோது படத்தின் இசையமைப்பாளர் பெயரை சீக்ரெட்டாக வைத்திருந்தார். படத்தின் விளம்பர டிசைன்களில், தொழில்நுட்பக் கலைஞர்கள் லிஸ்ட்டில் கூட இசையமைப்பாளர் பெயர் இல்லை.

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் ‘மறுவார்த்தை பேசாதே’ என்ற பாடலின் புரொமோ வெளியானது. ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பைக் கொடுத்த அந்தப்பாடலைக் கேட்டதும் இசையமைப்பாளர் யார்? என்கிற ஆவல் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது.

கெளதம் மேனன் படங்களுக்கு வழக்கமாக இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் இருவரில் யாராவது ஒருவராக இருக்குமோ? என்கிற சந்தேகம் இருந்தாலும் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்ட அவர்கள் பெயரை தெரிவிக்காமல் இருக்க மாட்டார். ஆகையால் யாரோ ஒரு புதுமுக இசையமைப்பாளரைத்தான் கெளதம் மேனன் கமிட் செய்திருக்கிறார் என்று பேசிக் கொள்கிறார்கள்.

ஒருவேளை ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் ரகுமானாக இருக்குமோ? அல்லது மீண்டும் இசையமைக்கத் தொடங்கியிருக்கும் சிம்புவாக இருக்குமோ? என்றெல்லாம் பெயர்களை டிக் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சீக்ரெட்டை சீக்கிரமா உடைங்க கெளதம் சார்!

DhanushEnai Noki Paayum ThotaGautham Vasudev Menon
Comments (0)
Add Comment