விஜய் ஏன் நிஜ வாழ்க்கையில் அமைதியாக இருக்கிறார்? : இதுதாங்க அந்த ரகசியம்

மர்ஷியல் படங்களில் எப்போதுமே ஆர்ப்பட்டத்தோடும், கலகலப்பாகவும் இருப்பார். பல படங்களில் வடிவேலு, விவேக் உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் சேர்ந்து காமெடி காட்சிகளையும் களை கட்ட வைத்திருக்கிறார்.

திரையில் இப்படி இருக்கும் விஜய் நிஜ வாழ்க்கையில் ரொம்பவே அமைதியானவர்.

ஏதாவது திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டாலும் கூட வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் யாராவது மேடையில் காமெடி செய்தால் வந்திருந்த கூட்டம் விசிலடித்து, கை தட்டி கொண்டாடும்.

ஆனால் அதே விழாவில் இருக்கும் விஜய் மட்டும் லேசான புன்முறுவலோடு அமைதியாகி விடுவார். வாய் விட்டு சிரித்த வரலாறே இல்லை.

இப்படி திரையில் மட்டுமே கலகலப்பாக இருக்கும் விஜய் ஏன் நிஜ வாழ்க்கையில் ஏன் அதற்கு நேர்மாறாக இருக்கிறார்?

இதோ பல ஆண்டுகளாக ரசிகர்கள் மண்டையை குடைந்து கொண்டிருந்த அந்தக் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது.

இதுகுறித்து விஜய்யின் அம்மா ஷோபா விஜய் சைலண்ட் ரகசியம் பற்றிச் சொல்கிறார்…

”’விஜய் சிறு வயதில் கலகலப்பாகத்தான் இருந்தார். அவர் இருக்கின்ற இடம் எப்போதுமே கலகலப்பாகவும், உற்சாகமாகவும் தான் இருந்தது. அவருடைய தங்கையின் மரணம் அவரை ரொம்பவே பாதித்து விட்டது. அதிலிருந்து மீள்வதற்கு ரொம்ப நாட்கள் ஆனது. அதன் பிறகு விஜய் ரொம்ப அமைதியாகி விட்டார். அது இன்று வரை தொடர்கிறது” என்று கூறியிருக்கிறார்.

தங்கை மீது விஜய்க்கு இவ்வளவு பாசமா? உண்மையிலேயே விஜய் ரசிகர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம்ப்பா இது!

TherivijayVijay 59விஜய் 59விஜய் தெறி
Comments (0)
Add Comment