13 வருடங்களுக்குப் பிறகு ஹிட் கூட்டணியுடன் சத்யராஜ் இணையும் “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்”

2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக எம்.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவைப் படம் “அடிதடி”.

சுமார் 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளது.

“சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாக எம்.ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார்.

கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுத திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ்

ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிய போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும் என்பதை அரசியல் நையாண்டியுடன் நகைச்சுவை கலந்து முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்”.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. சுந்தரி பிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ் வெற்றிக்கூட்டணி முதன்முறையாக ஹிந்தியில் தடம் பதிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

SathyarajShivraajSundhari Films
Comments (0)
Add Comment