நான்குமொழிகளில் வெளியாகும் ‘விட்னஸ்’!

நாம் கண்டும், காணாது, கடந்து போகும் தூய்மைப்பணியாளர்களின் வாழ்வை பேசுகிற படமாக வெளிவரவிருக்கிறது ‘விட்னஸ்’ திரைப்படம்.தமிழ் தெலுங்கு, இந்தி , கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் விட்னஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.“விட்னஸ்”

நகரத்தில் நடைபெறும் பல தினசரிக் குற்றங்களில் ஒன்று தான் இதுவும். இதற்கு முன் பலமுறை நடந்திருந்தாலும் ஒரு சிறிய அதிர்வைக் கூட இது ஏற்படுத்தியதில்லை. ஆனால் இம்முறை, பல்வேறு காரணங்களால் இதை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக நடக்கும் விசாரணையில், பல கண்ணியமான மனிதர்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வருகிறது.

தூய்மைப் பணியாளர்களின் உலகத்தை மையமாகக் கொண்டிருக்கும் இந்த “விட்னஸ்” திரைப்படம், பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.தமிழில் நேரடியாக வெளியாகவிருக்கும் இத்திரைப்படம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கிறது.

Actress Rohini MolletiActress Shraddha Srinathdirector deepakwitness movie